18+ வயதினருக்கு மட்டும். 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களுக்குக் கிடைக்கிறது.
Google Flow Music என்பது Google Labs வழங்கும் AI மியூசிக் ஸ்டுடியோ ஆகும். இதில் AI மூலம் பாடல்களை எளிதாக உருவாக்கலாம். மனநிலையை விவரித்தோ உங்கள் பாடல் வரிகளை ஒட்டியோ, முழுமையான உயர்தரப் பாடலைப் பெறலாம். அதன்பிறகு, உங்களுக்குரிய AI மியூசிக் தயாரிப்பாளர் மூலம் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப அதைத் தொடர்ந்து மேம்படுத்தலாம்.
இதற்கென ரெக்கார்டிங் பூத், உபகரணங்கள், இசைக் கோட்பாடு என எதுவும் தேவையில்லை. நீங்கள் முதல்முறை இசையமைப்பவராக இருந்தாலும் அனுபவமிக்க இசையமைப்பாளராக இருந்தாலும், சிறப்பான இசையை உருவாக்க Flow Music உங்களுக்கு உதவும்.
மனநிலை அல்லது பாடல் வரிகளை முழுப் பாடலாக மாற்றுங்கள்
"மாலைப் பொழுதில் கடற்கரை அலைகளின் நடுவே நாயகியை முதல்முறை பார்க்கும் நாயகன்" போன்ற ப்ராம்ப்ட்டை டைப் செய்யுங்கள் அல்லது நீங்களே எழுதிய பாடல் வரிகளை ஒட்டுங்கள், Flow Music குரல்கள் மற்றும் இசையுடன் முழுநீளப் பாடலை உருவாக்கும். பாப், ஹிப்-ஹாப், லோ-ஃபை, ஹவுஸ், இண்டி ராக், R&B, நாட்டுப்புற இசை போன்ற எந்த வகை இசையையும் முயற்சித்துப் பாருங்கள்.
உங்கள் AI தயாரிப்பாளருடன் உரையாடுங்கள்
உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்வதன் மூலமே உங்கள் டிராக்கை மேம்படுத்தலாம். "ட்ரம்ஸ் பீட் வேகத்தைக் குறை", "கிட்டாருக்குப் பதிலாக ஃப்ளூட் ஒலியைச் சேர்" அல்லது "இன்னும் கனமான குரலில் பாடு" என்று Gemini வழங்கும் உங்கள் தயாரிப்பாளரிடம் சொல்லுங்கள். இது மாற்றங்களைப் பயன்படுத்துவதோடு, ஒவ்வொரு டேக்கிலும் உங்கள் பாடலை மேலும் மெருகூட்டும்.
கவர் உருவாக்குங்கள், மாற்றுங்கள் மற்றும் நீட்டியுங்கள்
உங்கள் சொந்த டிராக்குகளைப் பதிவேற்றலாம் அல்லது நீங்கள் உருவாக்கிய பாடல்களை ரீமிக்ஸ் செய்யலாம். புதிய ஸ்டைலில் கவர் பாடலை உருவாக்கலாம், பாடலின் ஒரு பகுதியை மாற்றலாம் (கிட்டாருக்குப் பதிலாக பியானோ ஒலியைப் பயன்படுத்தலாம்), புதிய பாடல் வரி அல்லது இறுதிப் பகுதியுடன் பாடலை நீட்டிக்கலாம்.
உங்கள் பாடலுக்கு மியூசிக் வீடியோவை உருவாக்குங்கள்
Googleளின் வீடியோ மாடலான Veo மூலம் AI மியூசிக் வீடியோ உருவாக்கி உங்கள் டிராக்கிற்கு உயிரூட்டுங்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ப காட்சி, கதாபாத்திரங்கள், மனநிலை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி உங்கள் பாடலுடன் கச்சிதமாகப் பொருந்துகின்ற வீடியோவைப் பகிரலாம்.
ஸ்பேஸ்கள் மூலம் உருவாக்குங்கள்
ஸ்பேஸ்கள் மூலம் மேலும் பலவற்றைச் செய்யலாம்: பிரத்தியேக ஆடியோ செருகுநிரல்கள், இசை கேம்கள் அல்லது உங்கள் சொந்த மினி இசை ஆப்ஸை உருவாக்கலாம். பிறர் அவற்றைப் பயன்படுத்தவும் ரீமிக்ஸ் செய்யவும், நீங்கள் அவற்றைப் பகிரலாம்.
இசையைப் பகிருங்கள், கண்டறியுங்கள்
உங்கள் பாடல்களை வெளியிடலாம், பிளேலிஸ்ட்களை உருவாக்கலாம், கிரியேட்டர்களைப் பின்தொடரலாம், தினமும் புதிய இசையைக் கண்டறியலாம். நீங்கள் இசையை உருவாக்கும்போது Flow Music உங்கள் ரசனையைப் புரிந்துகொண்டு, காலப்போக்கில் உங்கள் தனிப்பட்ட இசைப் பாணிக்கு ஏற்றவாறு மேம்படுத்திக்கொள்ளும்.
புதிய கலைஞராகவோ தயாரிப்பாளராகவோ உங்கள் இசைப் பாணியைக் கண்டறியுங்கள். நண்பரின் பிறந்தநாளுக்கான பாடல், உங்கள் பாட்காஸ்ட்டிற்கான தீம் பாடல், உங்கள் அடுத்த வீடியோவிற்கான பீட், உங்களுக்கான பிரத்தியேக டிராக் ஆகியவற்றை உருவாக்க Flow Musicகை உங்கள் AI பாடல் உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தலாம். இன்று என்ன உருவாக்கப் போகிறீர்கள்?
பயன்பாட்டு விதிமுறைகள்: https://policies.google.com/terms
தனியுரிமைக் கொள்கை: https://policies.google.com/privacy
தனியுரிமை அறிக்கை: https://www.flowmusic.app/privacynotice
AI மியூசிக் ஸ்டுடியோ: யோசனை/வரிகளைப் பாடல்களாக, ரீமிக்ஸ் & வீடியோவாக மாற்றலாம்.
புதுப்பிக்கப்பட்டது:
25 நவ., 2026